» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் நான் முதல்வன் திட்டத்தில் 38,038 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர்!
வியாழன் 13, ஜூன் 2024 4:35:40 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 38,038 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் 28 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 38,038 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர்.நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், இட்டமொழி பகுதியை சேர்ந்த மாணவி.ஷர்மிலி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, நன்றி தெரிவிக்கையில் எனது பெயர் ஷர்மிலி நான் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தேன். எனது குடும்பத்தின் வறுமை நிலையின் காரணமாக என்னால் உயர்கல்வி படிக்க முடியாது என்ற நிலையில் இருந்தேன்.
எனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் நான் முதல்வன் திட்டம் குறித்து என்னிடம் தெரிவித்தார்கள். எந்த கல்லூரியில் எந்தெந்த துறையில் மேற்படிப்புபடித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும், அதற்கான செலவிற்கு வங்கிக்கடன் வழங்கப்படுவது குறித்தும், தெளிவாக எடுத்து கூறினார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக எனது உயர்கல்வி படிக்கும் கனவு நினைவாகுவதோடு, எனது குடும்பத்தையும் என்னால் சிறப்பாக பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தினை கொண்டுவந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

மகளிர் அணி நிர்வாகியிடம் அத்துமீறல்: தவெக மாவட்ட செயலாளர் நீக்கம்!
சனி 20, டிசம்பர் 2025 9:04:34 PM (IST)

முதல் அமைச்சர் கனவை விஜய் தியாகம் செய்ய வேண்டும்: தமிழருவி மணியன்
சனி 20, டிசம்பர் 2025 8:57:07 PM (IST)

பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு!
சனி 20, டிசம்பர் 2025 5:32:16 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி
சனி 20, டிசம்பர் 2025 11:19:51 AM (IST)

சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து: இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சனி 20, டிசம்பர் 2025 11:12:46 AM (IST)


.gif)