» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை!
சனி 18, மே 2024 11:07:01 AM (IST)
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்தவர் லூயிஸ் மைக்கேல் மகன் அந்தோணி அஸ்வின் (26). மரைன் இன்ஜனியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி ஈராக் நாட்டிற்கு கப்பல் பணிக்கு செல்ல வேண்டியிருந்ததாம்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாம். இதனால் மனவேதனையில் இருந்த அந்தோணி அஸ்வின் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்:
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அந்தோணி கில்டன் (21). இவரது அம்மா கடந்த வருடம் இறந்து விட்டார். இவரது அண்ணன் 6 மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த அந்தோணி கில்டன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெகடர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


