» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென் சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் வாகுறுதிகளை வெளியிட்டார் தமிழிசை..!!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 12:37:43 PM (IST)
தென் சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டார்.
அக்கா 1825 (365x5 years) என்ற தலைப்பில் தேர்தல், தமிழிசை சவுந்தரராஜனின் தென் சென்னை உத்தரவாதம் என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* தென் சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம்.
* தென் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம்.
* மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்
* தென் சென்னையில் உள்ள மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த திட்டம்
* பெருங்குடியில் குப்பைகள் அடைக்கப்படுவதால், மழைநீர் வடிகால் பிரச்சனை.
* பிரச்சனைகளை தீர்த்து மீனவர்களின் அடிப்படை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.
* 6 சட்டசபை தொகுதிகளிலும் 6 அலுவலகங்கள் திறக்கப்படும்.
* மீனவர்களுக்கான ஆலோசனைக்குழு போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி, அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் கூறினார்.