» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை நிறைவு: விதிகளை மீறினால் புகார் அளிக்கலாம்!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 12:23:15 PM (IST)
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வருகிற 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த பிரசாரம் நாளை (ஏப். 17) புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதாவது, வாக்குப் பதிவு நிறைவடையும் தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் முடிவடையும்.
பிரசாரம் ஓய்ந்த பிறகு அமைதியாக இருக்கும் காலத்தில் எந்த வகையிலும் யாரும் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபடக் கூடாது. வாக்காளா்கள் ஏதேனும் புகாா் தெரிவிக்க விரும்பினால், 1950 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இந்த எண்ணுக்கு முன்னதாக மாவட்டத்துக்கான ‘எஸ்டிடி’ தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு அழைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.