» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருச்செந்தூர் ஆவணி திருவிழா: அழைப்பிதழ் படி கொடியேற்றம் நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
சனி 29, ஆகஸ்ட் 2026 8:55:55 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாக் கொடியேற்றத்தை, கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் உள்ள விவரங்களின்படியே நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில் நிர்வாகி முத்துகிருஷ்ணன், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மகோற்சவ கொடியேற்றம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 9.22 மணி வரை நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கோவில் நிர்வாகம் தற்போது கொடியேற்றத்தை அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணி வரை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மாற்றியதற்கு உரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. பாரம்பரியமாகப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் நேரத்திலேயே கோவில் சடங்குகள் நடத்தப்பட்டு வருவதால், தற்போதைய நேர மாற்றம் மத நம்பிக்கைகளுக்கும், பக்தர்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 9.22 மணி வரை மட்டுமே கொடியேற்றத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருவிழாவிற்கான அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படியே கொடியேற்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இனிவரும் காலங்களில் திருவிழா சார்ந்த விவகாரங்களில் கோவில் வித்யாதாரரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)


