» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் மின் கட்டண உயர்வால் மக்கள் அவதி!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 10:53:10 AM (IST)

தூத்துக்குடியில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புதிய அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தவெக தலைமையில் புதிய அரசு அமைந்ததில் இருந்து பல்வேறு வகையான விலைவாசிகள் தாறுமாறாக அதிகரித்துள்ளதாக இணையதளத்தில் தமிழக மக்கள் அதிர்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புதிய அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சிவராம் கூறுகையில், பல லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக தவெக ஆட்சியில்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு காரணம் தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் இந்த சலுகை 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தும் என அறிவித்திருந்தது.
அதேசமயம் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் மாத அடிப்படையில் மின் கட்டண கணக்கீடு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் இலவசம் என முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து தவெகவின் தேர்தல் வாக்குறுதி மீறப்பட்டதாக அல்லது மாற்றப்பட்டதாக அப்போதே பெரும் விமர்சனத்திற்குள்ளானது. மேலும் பழையபடி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்வதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மக்கள் கருத்து
அதுAug 28, 2026 - 03:10:53 PM | Posted IP 172.7*****
ஆட்சி மாற்றத்தின் போது திராவிட பயலுகளின் திருட்டு வேலையாக இருக்கும்
BalaAug 28, 2026 - 12:58:53 PM | Posted IP 104.2*****
Tharkuri aatchi.... Maatram Yematram... Fradu payaluga....
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)



Naan thaanAug 28, 2026 - 07:08:29 PM | Posted IP 162.1*****