» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி மறைந்த உடற்கல்வி இயக்குநர் பால்சாமி நினைவாக முதலாம் ஆண்டு மினி மராத்தான் போட்டி விளாத்திகுளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டியை திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வி.மார்க்கண்டேயன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் 14 கிமீ தொலைவு கொண்ட ஆண்களுக்கான போட்டிகள் முதல் பரிசு ரூ 10 ஆயிரத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ், 2வது பரிசு ரூ 8 ஆயிரத்தை கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுரேஷ்குமார்,3வது பரிசு ரூ 5 ஆயிரத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தம் ஆகியோர் பெற்றனர்.
10 கிமீ தொலைவு கொண்ட பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசு ரூ 10 ஆயிரத்தை கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஜென்சி,2வது பரிசு ரூ 8 ஆயிரம்,3வது பரிசு ரூ 5 ஆயிரத்தை தூத்துக்குடி மாவட்டம் புதூரை சேர்ந்த உதய தர்ஷினி ,பவானி ஆகியோர் பெற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், வாக்கிங் ஃபிரண்ட்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநர் வையணன், ஆசிரியர் சேகர், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் இம்மானுவேல், ராமசுப்பு, பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, காவல்துறை சார்பு ஆய்வாளர் நாராயணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)

கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)

தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:53:26 PM (IST)

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)

ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - சாலை மறியல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு: நாகர்கோவில் வழியாக இயக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 3:42:08 PM (IST)



எதேAug 23, 2026 - 04:48:38 PM | Posted IP 172.7*****