» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி தீவிரம்: ஆணையர் அறிவிப்பு!

வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:35:09 PM (IST)

Bucklodaituty.jpg

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வெள்ளநீரை எளிதாகக் கடலுக்குள் வெளியேற்றும் வகையில், பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் ரூ. 5,370.00 லட்சம் மதிப்பீட்டில் துரிதமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வழியாகத் தான் மழை வெள்ளநீர் கடலுக்கு வழிந்தோடி வருகிறது. கடந்த 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பெய்த தொடர் கனமழையின் போது, மாநகர்ப் பகுதியில் இருந்து வந்த பெருமளவிலான மழை நீர் குறைந்த அகலம் கொண்ட பக்கிள் ஓடையில் செல்ல முடியாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வருங்காலங்களில் இது போன்ற வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், பக்கிள் ஓடையின் அகலத்தைக் கூடுதலாக 5 மீட்டர் வரை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இற்காக ரூ. 5,370.00 லட்சம் மதிப்பீட்டில் எஃப்.சி.ஐ குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை பணிகள் நடைபெறுகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போதிய முன்னேற்றத்தைக் காணும் வகையில், ஓடையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தற்போது மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன.


மக்கள் கருத்து

ஜெயகுமார்.சி.Aug 22, 2026 - 04:39:22 PM | Posted IP 162.1*****

முதலிலேயே மதுரை நத்தம் போகிற ரோட்டில் பெரிய பாலம் உள்ளது போல் இங்கேயும் பாலம் கட்டி இருந்தாள் பல ஆக்கிரமிப்புகளை தவிர்த்து இருக்கலாம்.

மெகஸ்Aug 22, 2026 - 02:03:26 PM | Posted IP 162.1*****

தேவையில்லாத வேலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory