» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:35:18 AM (IST)

ஆறுமுகநேரியில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற இளைஞரை லத்தியால் தாக்கிய சம்பவத்தில், காவலர்கள் இருவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் ஆறுமுகநேரி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆறுமுகநேரி மேலத் தெருவைச் சேர்ந்த அரசகுமார் மகன் விக்னேஷ் (25) மற்றும் அவரது நண்பர் சூர்யா ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் நோக்கிச் சென்றுள்ளனர். 

காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காண்பித்தும், அதனை கவனிக்காமல் அவர்கள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனே காவல்துறையினர் லத்தியால் தாக்கியதில் விக்னேஷின் கண் இமை பகுதியில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றித் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கண் இமையில் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாக்குதலால் அவரது பார்வைத் திறனும் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தீவிர விசாரணை நடத்தினார்.விசாரணையின் அடிப்படையில், ஆறுமுகநேரி காவல் ஏட்டு கஜேந்திரன் (43) மற்றும் காவலர் காளி (31) ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்Aug 11, 2026 - 08:50:18 AM | Posted IP 172.7*****

ஹெல்மெட் கட்டாயம் சொல்ல தெரிந்த போலீஸ்க்கு மண்டைல லத்தியால் அடிக்கலாமா? தலையை பாதுகாக்க ஹெல்மெட் கட்டாயம், கொஞ்சமாவது அறிவு இருக்கா? லத்தியை எடுத்தால் இடுப்புக்கு கீழ் தான் அடிக்க வேண்டும், சில நிறைய போலீஸ் அப்படிதான் கொலை வெறியோட மண்டையில் அடிப்பார்கள், உயிர் போனால் பெரிய பாவம், இப்படிப்பட்ட சில அரை குறை போலீஸ் வேலைக்கு வந்தால் ஆபத்தானது, ஆயுதப்படைக்கு, கூதி படைக்கு மற்ற தேவை இல்லை திருப்பி போலீஸ் மண்டையில் லத்தியால் அடித்தால் போதும் அப்போதான் புத்தி வரும், எல்லாம் சரியாகிவிடும் .

பெரியAug 11, 2026 - 08:07:45 AM | Posted IP 172.7*****

தண்டனை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory