» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பேரிடர் காலங்களில் விரைவான மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில், மாவட்டத்தில் முழுமையான வசதிகளுடன் கூடிய தனி இந்திய கடலோரக் காவல்படை (Indian Coast Guard) நிலையத்தை அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், நாடாளுமன்றத்தில் விதி 377-ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினையை எழுப்பிப் பேசினார். நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 கடலோர கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காகக் கடலை நம்பியுள்ளனர். ஆண்டுதோறும் புயல், கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று போன்ற இயற்கை பேரிடர்களால் இவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படுகிறது.
தற்போது கன்னியாகுமரி பகுதிக்கு அருகிலுள்ள கடலோரக் காவல்படை நிலையங்கள் தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதிகளில் அமைந்துள்ளன. கடலில் அவசர நிலை ஏற்படும் போது, மீட்புக் குழுக்கள் நீண்ட தூரம் பயணித்து வர வேண்டியுள்ளதால், உயிர்களைக் காப்பாற்றக்கூடிய பொன்னான நேரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. இந்தத் தாமதத்தினால் தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகளும், உடைமை இழப்புகளும் ஏற்படுவதாக விஜய் வசந்த் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
மேலும், கன்னியாகுமரியில் அமையவுள்ள புதிய கடலோரக் காவல்படை நிலையத்தில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக விமான அம்புலன்ஸ் வசதி, கடலில் சிக்கியவர்களை விரைவாக மீட்க ஹெலிகாப்ட்டர் வசதி, அதிவேக மீட்பு மற்றும் தேடல் படகுகள்,நவீன கண்காணிப்பு தொழில்நுட்பங்களுடன் கூடிய உயர்மட்ட கடலோரக் கண்காணிப்பு கோபுரம், ஆகிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இமையமையத்தை அமைப்பதன் மூலம் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மனித உயிர்களைக் காப்பதுடன், நாட்டின் தென் கடற்பகுதியின் பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)


