» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)
தமிழகத்தில் மேக்கேதாட்டு பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்திலேயே தவெக தலைமையிலான அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டினார்.
மத்திய பாஜக அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இதுகுறித்து முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது: "திமுக கூட்டணியைச் சார்ந்த 32 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொகுதி வரையறை தொடர்பாகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தின் முடிவு குறித்து இன்னமும் தெளிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை. தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் மேக்கேதாட்டு பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்திலேயே இந்த எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு முழுமையாக எதிரானவர்கள் அல்லர்; நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதையே கோருகிறோம். தேர்தலின் போது, தேர்தல் வெற்றியை விடத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பதே முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தோம். தேர்தலில் வெற்றி பெறுவதை விடத் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதே எங்களின் முக்கிய நோக்கம்.
தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தவெக தலைமையகத்தின் செயலாளரைப் போலச் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக அழைப்பதும், கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்புவதையும் அவரே செய்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)


