» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருகே உள்ள வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இறச்சகுளம் முப்பிடாரி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் பழையாற்றை அடைந்ததும், கொண்டு வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்தனர்.
தொடர்ந்து, புதிய தாலிக்கயிறு மாற்றி, ஆற்றங்கரையில் அம்மனை வேண்டிச் சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப்பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஆடிப்பெருக்கையொட்டி பழையாற்றுப் பகுதியில் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)


