» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)



அழகியபாண்டியபுரத்தில் இருந்து நரிக்குறவர் காலனி வரை சென்று வரும் அரசுப் பேருந்து சேவையை ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.  

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டம் சார்பில், அழகியபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் வைத்துப் பள்ளி மாணவ, மாணவியர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து வழித்தட நீட்டிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  

போக்குவரத்துத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் இப்புதிய பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.  இந்த வழித்தட நீட்டிப்பின் மூலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள், வேலைக்குச் செல்லும் மகளிர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.  

தடம் எண் 38V: நெல்லை சந்திப்பிலிருந்து காலை 6:05 மணிக்குப் புறப்பட்டுத் தேவர்குளம் செல்லும் நகரப் பேருந்து மற்றும் மாலை 17:50 மணிக்கு நெல்லை சந்திப்பு வரும் பேருந்து, இனி நரிக்குறவர் காலனி வரை சென்று வருமாறு வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர். எஸ். முருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் திருநெல்வேலி கோட்ட வணிகப் பிரிவு துணை மேலாளர், கட்டபொம்மன் நகர் கிளை மேலாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து

kavarnmentAug 9, 2026 - 09:33:42 PM | Posted IP 104.2*****

contract kaasu nallaa vilaaduthu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory