» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகராட்சியில் ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா? - பொதுமக்கள் கொந்தளிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:49:40 AM (IST)
தூத்துக்குடியில் வரி செலுத்தாத ஏழை எளிய மக்களின் வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் லட்சக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ள திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், சில ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ள ஏழை எளிய மக்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் போக்கிற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனுமதியின்றி இயங்கும் திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் பல லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளன. குறிப்பாகப் பிரபலத் தனியார் பள்ளி ஒன்று ₹23 லட்சம் வரை வரி பாக்கி வைத்துள்ளது.
₹23 லட்சம் பாக்கி வைத்துள்ள பள்ளி மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், ₹5,000 பாக்கி வைத்திருந்த ஏழைத் தொழிலாளியின் வீட்டுக் குடிநீர் இணைப்பை உடனடியாகத் துண்டித்துள்ளனர். ஆனால், அதே பகுதியில் ₹38,000 பாக்கி வைத்திருந்த வசதிபடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
பணபலம் உள்ள பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், ஏழைகளுக்கு எதிராகவும் "ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு" எனப் பாகுபாடு காட்டும் மாநகராட்சி நிர்வாகம், உடனடியாகக் கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ள பெரிய நிறுவனங்களிடம் வரிகளை வசூலிக்க வேண்டும் என்றும், விதிமீறிய கட்டிடங்களுக்குச் சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)



naan thaanAug 10, 2026 - 04:47:50 PM | Posted IP 104.2*****