» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் வின்பாஸ்ட் கார் அனுப்பி வைப்பு

புதன் 5, ஆகஸ்ட் 2026 1:21:24 PM (IST)



தூத்துக்குடி துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து ரயில் மூலம் வின்பாஸ்ட் கார் அனுப்பி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி சிப்காட் அருகில் வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மாதத்துக்கு 1000 முதல் 2 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. அதன்படி கார்களை ஒரே நேரத்தில் அதிக அளவில் பாதுகாப்பாக அனுப்ப ரயில் போக்குவரத்து உகந்ததாக உள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் 10 சரக்கு ரயில்களில் மின்சார கார்களை பல்வேறு நகரங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து நேற்று முதல் அரியானா மாநிலம் பல்லப்கார் நகருக்கு ரயில் மூலம் 100 மின்சார கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக கார்களை ஏற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 25 சரக்கு பெட்டிகளில் இந்த கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு சரக்கு கட்டண வருமானமாக ரூ.22.07 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது. இந்த சரக்கு போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுத்த முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் தலைமையிலான வர்த்தக வளர்ச்சிக் குழுவுக்கு கோட்ட ரெயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா பாராட்டு தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து

சரி இப்போ என்னAug 6, 2026 - 12:55:10 PM | Posted IP 104.2*****

அது யாருக்கு லாபம் ? தூத்துக்குடி மக்களுக்கா ? ஏழைக்கா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory