» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபம் அருகில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் 'நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழாவை' சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் இன்று (25.07.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் குத்துவிளக்கேற்றி உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்: "தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கொங்குநாடு உணவுத் திருவிழா, செட்டிநாடு உணவுத் திருவிழா, நாஞ்சில் நாட்டுப் பாரம்பரிய உணவு உட்படப் பல்வேறு மாவட்டங்களின் உணவு வகைகளைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தனித்தன்மையுடன் கூடிய உணவுத் திருவிழாக்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரிய உணவு வகைகளைப் பிரதிபலிக்கும் வகையில் காமராஜர் மணிமண்டபம் அருகில் இன்று (25.07.2026) மற்றும் நாளை (26.07.2026) ஆகிய இரண்டு நாட்கள் ஹோட்டல் தமிழ்நாடு சார்பில் இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இதேபோன்று திருச்சி ராக்போர்ட் மற்றும் மதுரை பாண்டியன் ஹோட்டல் வளாகங்களிலும் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இந்த உணவுத் திருவிழாவில் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற அவியல், பல்வேறு மீன் குழம்பு வகைகள், தேங்காய் மற்றும் கடல் உணவுகள் பலாப்பழ பாயசம், அட பிரதமன் கொல்லம் நெத்திலி பொரியல், நாஞ்சில் ஈரல் வறுவல், கிள்ளியூர் மரவள்ளி போண்டா தேன்குழல், மோதகம், அதிரசம் உள்ளிட்ட பாரம்பரிய இனிப்பு வகைகள்வழங்குவதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"நாஞ்சில் நாட்டு உணவு மரபைப் பாதுகாத்து, அதன் தனித்துவமான சுவையை உலகறியச் செய்யும் முயற்சியாக இந்த உணவுத் திருவிழா அமைகிறது. எனவே பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உணவுப் பிரியர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு நாஞ்சில் நாட்டின் அசல் பாரம்பரியச் சுவைகளை சுவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், தமிழ்நாடு ஹோட்டல் பொதுமேலாளர் நவீன்கார்த்திக், மண்டல கணக்கு அலுவலர் ராஜேஸ்வரி, மாதவன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)

கன்னியாகுமரிக்கு புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:24:02 PM (IST)

பொதுமக்களின் அலைக்கழிப்பிற்கு முற்றுப்புள்ளி : இல்லம் தேடிச் செல்லும் இலவச எப்ஐஆர் நகல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:02:53 AM (IST)


