» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை!
வெள்ளி 3, ஜூலை 2026 4:59:24 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து இந்த சோதனையைத் தொடங்கினர். குறிப்பாக, மாநகராட்சியின் பொறியியல் பிரிவு அலுவலகத்திற்குள் சென்ற போலீசார், உடனடியாக அதன் முக்கிய நுழைவு வாயிலைப் பூட்டி அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த திடீர் சோதனையின் காரணமாக மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. சோதனை நடக்கும் சமயத்தில் வெளிப்பணிகள் நிமித்தமாக மற்றும் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்த மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் வரி செலுத்த மனு அளிப்பதற்காக வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
லஞ்சப் புகார் மற்றும் முறைகேடுகள் குறித்த ரகசியத் தகவலின் பேரில் இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி வரலாற்றிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் இங்கு சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)


