» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)
தூத்துக்குடியில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகப் பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கே.டி.சி நகரில் வசிப்பவர்கிருஷ்ணகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிருந்தா தேவி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் பிருந்தாதேவி விட்டுவிட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது தாயார் மகளை காணவில்லை என்று சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து பிருந்தா தேவியை தேடி வந்தார்
மேலும் அவரது தெருவில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார் அப்போது சிசிடிவி கேமராவில் பிருந்தா தேவி தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஐயப்பன் மகன்மாரிமுத்து (43) என்பவரது வீட்டுக்குள் சென்றது தெரிய வந்தது. பின்னர் அவர் அந்த வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி பிரியா (32) ஆகிய இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது இதில்
மாரிமுத்துவுக்கும், பக்கத்து வீட்டுப் பெண்ணான பிருந்தா தேவிக்கும் இடையே கடந்த சில காலமாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று மதியம் மாரிமுத்துவின் மனைவி பிரியா வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில், பிருந்தா தேவி மாரிமுத்துவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவரும் தனிமையில் இருந்ததாகத் தெரிகிறது.
எதிர்பாராத விதமாக வீட்டிற்குத் திரும்பிய பிரியா, தனது கணவருடன் பிருந்தா தேவி நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியா, பிருந்தா தேவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். இந்த மோதலின் உச்சக்கட்டமாக, பிரியா பிருந்தா தேவியை தலையணையால் அமுக்கி கழுத்தைநெறித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி பிருந்தா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் கணவன் மனைவி இருவரும் செய்வது தெரியாது அறிந்து வீட்டுக்குள்ளேயே பிருந்தா தேவியின் பிணத்தை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துள்ளனர் என்று தெரியவந்தது. பின்னர் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார், மாரிமுத்து வீட்டுக்கு சென்று அறையில் பூட்டி வைத்திருந்த கதவைத் திறந்து உள்ளே சென்றுபிருந்தா தேவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக மாரிமுத்து மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)

திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)



Babuமே 13, 2026 - 08:20:46 PM | Posted IP 162.1*****