» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் சிஎன்ஜி பிரச்சனையால் பேருந்து சேவை பாதிப்பு : பயணிகள் கடும் அவதி!
செவ்வாய் 12, மே 2026 12:45:33 PM (IST)
தூத்துக்குடி அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனையில் சிஎன்ஜி எரிபொருள் நிலையம் இல்லாததால், பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்ப நீண்ட நேரம் ஆகுவதும், அதன் காரணமாகப் பேருந்து சேவைகள் ரத்தாவதும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி நகரப் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முறையாக இயக்கப்படுவதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துகள் அடிக்கடி வழித்தடம் மாற்றப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி - நாசரேத் வழித்தடத்தில் இரவு 10:10 மணிக்குச் செல்ல வேண்டிய கடைசிப் பேருந்து, கடந்த ஒரு வாரமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் இயக்கப்படுகிறது. இதனால் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டால், "ஓட்டுநர் கேஸ் நிரப்பச் சென்றுள்ளார், இதோ வந்துவிடுவார்" என மணிக்கணக்கில் இழுத்தடிப்பதாகப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி பணிமனையில் புதிதாக 40-க்கும் மேற்பட்ட சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பணிமனைக்குள்ளேயே எரிபொருள் நிரப்பும் வசதி இல்லை. இதனால் ஓட்டுநர்கள் தனியாரிடம் உள்ள பங்கிற்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டியுள்ளது. இதுவே பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், போக்குவரத்துப் பணிமனைக்குள்ளேயே சிஎன்ஜி எரிபொருள் நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நாசரேத், சாயர்புரம் போன்ற புறநகர் பகுதிகளுக்கான இரவு நேரப் பேருந்து சேவையை முறைப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)

திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)



Babuமே 12, 2026 - 07:14:14 PM | Posted IP 172.7*****