» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வாக்கு எண்ணும் பணி: வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
சனி 2, மே 2026 5:03:13 PM (IST)

தூத்துக்குடியில் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணி தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 2) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷூ மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அலுவலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றுவது குறித்து ஆட்சியர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் முக்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)



ராஜ்மே 2, 2026 - 07:22:53 PM | Posted IP 162.1*****