» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சங்கரன்கோவிலில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு - 10% தள்ளுபடி அறிவிப்பு!
சனி 2, மே 2026 12:12:30 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆயிரம் தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களுடன் கூடிய பிரம்மாண்ட புத்தகத் திருவிழா தொடங்கியது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் சங்கரன்கோவில் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழா, அங்குள்ள டிஎன்எஸ்ஆர்எஸ் மஹாலில் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழாவிற்குச் சங்கரன்கோவில் ரோட்டரி சங்கத் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் முத்துமுருகன், ரமேஷ், ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மருத்துவர் வி.எஸ். சுப்புராஜ், கண்காட்சியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
கலை, இலக்கியம், வாழ்க்கை வரலாறு, நாவல், அறிவியல், மருத்துவம் மற்றும் போட்டித் தேர்வுக்கான நூல்கள் என 1,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் தினமும் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவருக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்காகக் கட்டுரை, ஓவியம் மற்றும் திருக்குறள் எழுதும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 1-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி, மே 13-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம்.
தொடக்க விழாவில் ரோட்டரி சங்கச் செயலாளர் ஞானமுருகன், முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் தண்டபாணி, செந்தில்வேல், ஈஸ்வர மூர்த்தி, தலைமையாசிரியர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கச் செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாம்பரம் - திருவனந்தபுரம் அமித் பாரத் ரயிலைத் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
சனி 2, மே 2026 12:34:24 PM (IST)

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)

தமிழகத்திற்குத் தனி ரயில்வே அமைச்சகம் தேவை : குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை
வெள்ளி 1, மே 2026 12:06:58 PM (IST)

குமரி மாவட்ட குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!
வெள்ளி 1, மே 2026 10:36:50 AM (IST)

கன்னியாகுமரி கடலில் அமெரிக்க வாழ் சகோதரிகள் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
வெள்ளி 1, மே 2026 8:53:57 AM (IST)

வெப்ப அலை : நண்பகல் 12 முதல் 3 மணி வரை தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி செய்யத் தடை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:33:54 PM (IST)


