» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது: பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்!
புதன் 29, ஏப்ரல் 2026 8:34:26 AM (IST)
தூத்துக்குடி அருகே அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளிக் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் ஒன்றரை யூனிட் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், வர்த்தகரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்துவதாகக் கிராம நிர்வாக அலுவலர் (மாரிசங்கருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் எவ்வித அனுமதியுமின்றி மண் அள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், தட்டப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பொக்லைன் இயந்திர ஆப்பரேட்டர் ராமசாமி (33), லாரி ஓட்டுநர் வெள்ளைச்சாமி (45) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு பொக்லைன் இயந்திரம், ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒன்றரை யூனிட் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாம்பரம் - திருவனந்தபுரம் அமித் பாரத் ரயிலைத் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
சனி 2, மே 2026 12:34:24 PM (IST)

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)

தமிழகத்திற்குத் தனி ரயில்வே அமைச்சகம் தேவை : குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை
வெள்ளி 1, மே 2026 12:06:58 PM (IST)

குமரி மாவட்ட குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!
வெள்ளி 1, மே 2026 10:36:50 AM (IST)

கன்னியாகுமரி கடலில் அமெரிக்க வாழ் சகோதரிகள் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
வெள்ளி 1, மே 2026 8:53:57 AM (IST)

வெப்ப அலை : நண்பகல் 12 முதல் 3 மணி வரை தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி செய்யத் தடை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:33:54 PM (IST)



ஊர் மக்கள்Apr 29, 2026 - 11:12:26 AM | Posted IP 162.1*****