» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை : பெண் உட்பட 3 பேர் கைது!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 9:27:49 PM (IST)

தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் தொடர்பில் இருந்த பெண் உள்ளிட்ட மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (25). இவர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள கல்லறை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது நெற்றி, வலது தொடை மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் இருந்தன. தகவல் அறிந்து வந்த மணியாச்சி  போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மரணம் குறித்துத் துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த கனகவல்லி (33) என்பவருடன் கணேசனுக்கு கடந்த ஓராண்டாகத் தவறான உறவு இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் கனகவல்லியிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கனகவல்லி அளித்த வாக்குமூலத்தில் "கணேசனுடன் ஓராண்டாகத் தொடர்பு இருந்தது. ஆனால், அவர் அடிக்கடி உடலுறவிற்கு வற்புறுத்தி எனக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், இது குறித்து எனது சகோதரர் மகனிடம் கூறினேன். அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டோம்.

திட்டத்தின்படி, நேற்று இரவு 11 மணி அளவில் கணேசனைச் சம்பவ இடத்திற்கு வருமாறு கனகவல்லி அழைத்துள்ளார். அங்கு கணேசன் வந்தபோது, மறைந்திருந்த கனகவல்லியின் உறவினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் மரக்கட்டையால் கணேசனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பாகக் கனகவல்லி மற்றும் தலைமறைவாக இருந்த மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தவறான உறவால் ஏற்பட்ட தொல்லை காரணமாகத் திட்டமிட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory