» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவில்பட்டி வளர்ச்சிக்கு மதிமுக என்றும் துணை நிற்கும் : துரை வைகோ எம்.பி. உறுதி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:40:09 AM (IST)
கோவில்பட்டி தொகுதியின் வளர்ச்சிக்கும், இங்குள்ள தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் மதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. பேசினார்.
கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கா. கருணாநிதியை ஆதரித்து, வில்லிசேரி கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் துரை வைகோ எம்.பி. கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்: "கோவில்பட்டி பகுதியின் முதுகெலும்பாக விளங்கும் தீப்பெட்டித் தொழிலைப் பாதிக்கும் வகையில், பிளாஸ்டிக் லைட்டர் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இப்பகுதியில் அமைய விடமாட்டோம். தொழிலாளர்களின் நலனே எங்களின் முக்கிய நோக்கம்" என உறுதியளித்தார்.தொடர்ந்து பேசிய அவர், "இந்தத் தேர்தல் வெறும் திமுக மற்றும் அதிமுக இடையிலான போட்டி கிடையாது. இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான போர்; மதச்சார்பின்மைக்கும் மதவாதத்திற்கும் இடையிலான தேர்தல். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலும் ஏழை மக்களுக்காகப் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்" எனப் பாராட்டினார்.
இந்தக் கூட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், காங்கிரஸ் மாவட்டத் செயலாளர் பெருமாள்சாமி, தேமுதிக சுரேஷ், விசிக முருகன், சிபிஎம் நகரச் செயலாளர் சீனிவாசன், சிபிஐ பாலமுருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)

கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

நள்ளிரவில் காய்கறி வியாபாரியின் ஆட்டோ எரிந்து சேதம் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:25:27 AM (IST)

பைக் மீது கனிமவள லாரி மோதி விபத்து : தந்தை கண்முன்னே மகள் பலி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:45:04 AM (IST)

நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)


சங்கரன்Apr 12, 2026 - 08:56:07 AM | Posted IP 162.1*****