» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் களமிறங்கியுள்ளார் : நயினார் நாகேந்திரன்
சனி 11, ஏப்ரல் 2026 5:47:26 PM (IST)
திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேற்று காரைக்குடியில் விஜய் 'ரோடு ஷோ' சென்றபோது சைக்கிள் ஓட்டி வந்ததாகச் சொன்னார்கள். அங்கிருந்தவர்களுக்குக் கையசைத்துக்கொண்டும், ஆடிக்கொண்டும் வந்ததாகக் கூறுகின்றனர். சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகவோ, ஜெயலலிதா ஆகவோ மாறிவிட முடியாது.
அரசியலுக்கு வருவதற்குத் தனித்துவமான கொள்கைகளும், வலுவான அமைப்புகளும், இயற்கையான உணர்வுகளும் இருக்க வேண்டும். ஆனால், விஜய் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காகவே தனியாகக் கட்சி ஆரம்பித்துள்ளார் என்பது போலத் தெரிகிறது. அவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே களமிறங்கியுள்ளார்.
காரைக்குடியில் அவர் சைக்கிள் ஓட்டியது வேடிக்கையாக இருந்தது. சைக்கிள் ஓட்டுவதற்காகவா ஒருவர் அரசியலுக்கு வருகிறார்? தமிழகத்தில் இருந்து திமுகவை ஓட்ட (அப்புறப்படுத்த) வேண்டும் என்பதுதான் இலக்காக இருக்க வேண்டும். அதைவிடுத்து சைக்கிள் ஓட்டுவது போன்ற செயல்கள் எல்லாம் ஒரு கேலிக்கூத்து என்று சாடினார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)

கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

நள்ளிரவில் காய்கறி வியாபாரியின் ஆட்டோ எரிந்து சேதம் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:25:27 AM (IST)

பைக் மீது கனிமவள லாரி மோதி விபத்து : தந்தை கண்முன்னே மகள் பலி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:45:04 AM (IST)

நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)

