» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழகத்தைப் புறக்கணிக்கும் மோடி அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

ஞாயிறு 15, மார்ச் 2026 1:58:29 PM (IST)



"தமிழகத்திற்கு பட்ஜெட்டில் கூட நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கும், அவர்களுக்கு அடிமையாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும் வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்" என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

ஒன்றிய பாஜக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து புறக்கணிப்பதைக் கண்டித்து, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி' கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகிக்க, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்புரையாற்றினார். மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: "ஒன்றிய அரசு கல்வி நிதி, 100 நாள் வேலைத்திட்ட நிதி எனத் தமிழகத்திற்கான அனைத்து நிதி ஆதாரங்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறோம் என்று கூறிவிட்டு, விலையை ஏற்றியதுடன் இப்போது சிலிண்டரே கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளது. சென்னையில் இருப்பவர்கள் போன் செய்து தூத்துக்குடியிலிருந்து மண் அடுப்பு வாங்கி அனுப்புங்கள் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

ரஷ்யாவோடு ஒப்பந்தம் இருந்தவரை அனைத்தும் சீராக இருந்தது. ஆனால், அமெரிக்காவிடம் ஒப்பந்தம் போட்ட பின் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது. தேர்தலை மனதில் வைத்துக்கூடத் தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்த அதிமுக மற்றும் தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்த மதச்சார்பற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம்,  பொருளாளர் ரவீந்திரன், மாநில நிர்வாகிகள் புளோரன்ஸ், அன்பழகன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா மண்டலத்தலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன் மற்றும், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, சமத்துவ மக்கள் கழகம், எஸ்டிபிஐ, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

SathishMar 15, 2026 - 08:21:44 PM | Posted IP 172.7*****

Modi government had been given to the 1000crores for smart City scheme that the amount has not been utilising appropriate corporation development works by dravida government. G

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory