» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலையோரப் பாதைகளை அகற்றிய அதிகாரிகளைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம்!
புதன் 18, பிப்ரவரி 2026 8:17:48 AM (IST)
தூத்துக்குடியில் சாலையோரப் பாதைகளை அகற்றிய அதிகாரிகளைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரியை ஒட்டிய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் செல்வதற்காகக் கான்கிரீட் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் சாலையிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயரத்தில் இருப்பதால், சாலையோர வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வருவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக மணல்களைச் சேர்த்துச் சாய்வு தளங்கள் மற்றும் படிக்கட்டுகளை அமைத்திருந்தனர். இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தென்பாகம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், வீடுகளுக்குச் செல்ல மாற்று வழிகளை ஏற்படுத்தித் தரும் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என மக்கள் தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் பணியைப் பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:25:12 PM (IST)

குமரி மாவட்டக் கல்லூரிகளில் ரூ.11 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:43:44 AM (IST)

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)


babuFeb 18, 2026 - 01:21:51 PM | Posted IP 104.2*****