» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாப மரணம்: தூத்துக்குடியில் சோகம்!

ஞாயிறு 15, பிப்ரவரி 2026 7:27:06 PM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்து மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி லயன்ஸ் டவுன், 7-வது தெருவைச் சேர்ந்தவர் அல்போன்ஸ். இவரது மகன் ஜான்சன் (52). மீனவரான இவர், இன்று மதியம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக கடலில் குதித்து அவரை மீட்க முயன்றனர். 

இருப்பினும், ஜான்சன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த ஜான்சனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக மீனவர் பணியின்போது உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மீனவர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory