» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மாசி மாத மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாத மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவாலயங்களில் கடைப்பிடிக்கப்படும் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால் தீவினைகள் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக, 'மகா சனி பிரதோஷம்' அன்று இறைவனை வழிபடுவது, ஒரு ஆண்டு முழுவதும் சிவனை வழிபட்டதற்கு இணையான பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் சனி பிரதோஷம் மற்றும் மாசி மாத பிரதோஷம் இணைந்து வந்ததை முன்னிட்டு, சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நந்தி பகவான் மற்றும் சங்கர ராமேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
அபிஷேகத்தைத் தொடர்ந்து, சுவாமிக்கும் நந்திக்கும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி, ஆலய வளாகம் மற்றும் நான்கு மாட வீதிகள் வழியாக உலா வந்தனர். இந்த விழாவில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவாய நம, ஓம் நமச்சிவாய போன்ற பக்தி கோஷங்களை முழங்கியபடி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

