» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 7:53:58 AM (IST)

தூத்துக்குடியில் பணி மேம்பாட்டு ஊதியம் (Career Advancement Scheme - CAS) வழங்கக்கோரி அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தங்களுக்குச் சேர வேண்டிய இந்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே திரண்ட பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூட்டா (MUTA) மூன்றாம் மண்டல தலைவர் லெனின் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் முருகன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். மூட்டா மத்திய இணைச் செயலாளர் சிவஞானம் கோரிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்கள் தொடரும் எனப் பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)


IndianFeb 14, 2026 - 09:45:56 AM | Posted IP 162.1*****