» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விஜயின் பேன்ட் நிறத்தையும் முதல்வர் ஸ்டாலின் திருடுகிறார் : நாஞ்சில் சம்பத் பேச்சு!

வியாழன் 12, பிப்ரவரி 2026 11:15:48 AM (IST)

தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் நகலெடுக்கிறார். எங்கள் தளபதி போடும் அதே நிற பேண்ட்-ஐ அவரும் போடுகிறார். தளபதிக்கு இருக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?" என்று நாஞ்சில் சம்பத் பேசினார். 

திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலை வகித்தார். இதில் அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில்,"சூரனை முருகன் சம்ஹாரம் செய்தது போல, ஆட்டம் போடுபவர்களைத் தலைவர் விஜய்யின் தம்பிகள் வீழ்த்துவார்கள். இனி வரும் காலம் நமது காலம்; அடுத்த முதல்வர் விஜய்தான். இரண்டு பெரும் பகைகளை எதிர்த்துத் தலைவர் களத்தில் நிற்கிறார். இந்தியத் துணைக்கண்டத்திலேயே ஒரு கோடி இளைஞர்களைத் தொண்டர்களாகக் கொண்ட தலைவனை அரசியல் களம் இப்போதுதான் பார்க்கிறது."

"மக்களுக்காகத் தொடங்கப்பட்ட தே.மு.தி.க இன்று கரைந்து கொண்டிருக்கிறது. விருப்ப மனு வாங்கக்கூட ஆள் இல்லாத நிலையில் அக்கட்சி உள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக வந்த உலகநாயகன் கமல்ஹாசன், இன்று அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் தஞ்சமடைந்துள்ளார். சீமானின் கட்சியை இந்தத் தேர்தலோடு மக்கள் வழியனுப்பி வைக்க வேண்டும்."

தி.மு.க-விற்காக உழைத்தது, கண்ணீர் மற்றும் செந்நீர் சிந்தியது ஒரு குடும்பம் மட்டும்தானா? உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு திருக்குறளைச் சரியாகச் சொல்லத் தெரியுமா? மாநில சுயாட்சி பற்றி அவர் ஒரு மணி நேரம் பேசினால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். ஜனநாயகன் (விஜய்) வரும்போது நீங்கள் நாற்காலியை விட்டு நகர வேண்டியிருக்கும்."

முதலமைச்சர் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தாரோ, அப்போதே அவரது பதவி நகரத் தொடங்கிவிட்டது. விக்ரவாண்டியில் எங்கள் தளபதி 'ரேம் வாக்'  சென்றார்; அதை அப்படியே முதலமைச்சர் நகலெடுக்கிறார். எங்கள் தளபதி போடும் அதே நிற பேண்ட்-ஐ அவரும் போடுகிறார். நிறத்தைக் கூடவா திருட வேண்டும்? தளபதிக்கு இருக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?"

சேப்பாக்கம் மைதானத்தில் விசில் ஊதக் கூடாது எனத் தடை விதித்துள்ளனர். தி.மு.க-வினரைப் பார்க்கும் இடமெல்லாம் காது கிழியும் அளவிற்கு விசிலை எடுத்து ஊதுங்கள். யானையின் பிளிறலை விட விசிலின் ஓசை வலிமையானது. இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், விஜயராஜ் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

என்னதுFeb 12, 2026 - 11:22:04 AM | Posted IP 162.1*****

வாடகை வாய் அங்கேயும் போயிட்டா?? அடுத்த இன்னோவா கார் ஆசைப்பட்டு tvk இல் தஞ்சம் அடைந்து விட்டதா ? என்ன கருமம் இது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory