» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவு
வியாழன் 12, பிப்ரவரி 2026 8:24:56 AM (IST)

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் நேற்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாரதிய ஜனதா அரசின் தொழிலாளர் நலன் பாதிக்கும் சட்டங்கள், விவசாயிகள் விரோதப் போக்கு மற்றும் 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் (பீச் ரோடு) உள்ள கனரா வங்கி கிளை முன்பாக நேற்று மாலை வங்கி ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். நகர வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்தும் உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி நகர வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் முழுமையாகப் பங்கேற்பார்கள் என்றும், இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
thamilanFeb 12, 2026 - 01:14:45 PM | Posted IP 172.7*****
பத்தாயிரம் பதினைந்து ஆயிரம் சம்பளத்திற்கு படாத பாடு படுகிறான் ஒவ்வொரு மனிதனும். ஆனால் போராட்டம் செய்வதே வேலையாகிவிட்டது.
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)


muthuFeb 12, 2026 - 01:27:28 PM | Posted IP 104.2*****