» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை பாதிக்கும் – கனிமொழி எம்.பி. பேட்டி!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:22:18 AM (IST)

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது : நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பில்லை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், ஆளும் கட்சியினரே பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுவதற்குப் பயப்படும் சூழல் நிலவுவதாகக் கூறுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார்.

வெளிநாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் போது அது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும். ஆனால், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. டிரம்ப் அறிவித்த பிறகே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்கப்படும் பொருட்களுக்கு வரி ஏதும் இல்லாமலும், இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு 18% வரி விதிக்கப்படுவதும் நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க வேளாண் பொருட்கள் இந்தியாவிற்குள் தடையின்றி வருவதால் இந்திய விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவை வேளாண் பொருட்களின் குப்பைத் தொட்டியாக மாற்றும் இந்த முயற்சியை தாம் தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஆம்Feb 10, 2026 - 07:13:05 PM | Posted IP 172.7*****

திருட்டு குடும்பம்

IndianFeb 10, 2026 - 09:49:40 AM | Posted IP 172.7*****

Except Tasmark, all things will destroy people.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory