» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லோடு ஆட்டோவில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் : இருவர் கைது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 8:52:00 AM (IST)
ஆறுமுகநேரியில் லோடு ஆட்டோவில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிராம் எடையுள்ள 861 பாக்கெட் புகையிலைப் பொருள்கள், 12 கிராம் எடையுள்ள 81 பாக்கெட் கூல் லிப் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை கடத்தி வந்தவர்கள் ஆறுமுகநேரி, பேயன்விளை, கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் சக்தி விஜயன் (44), கணேச புரத்தைச் சேர்ந்த வீரமணி மகன் நட்டார் (41) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4.5 கிலோ புகையிலை, கூல் லிப் பொருள்கள், லோடு ஆட்டோ, ரூ. 20,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் சக்தி விஜயன், கடந்த மாதம் 5ஆம் தேதி 100 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தபோது தப்பியோடிய முக்கிய குற்றவாளி என்பதும், இவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மினி லோடு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்தியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)


inbaFeb 10, 2026 - 08:07:17 AM | Posted IP 104.2*****