» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது: 2 வாகனங்கள் பறிமுதல்!

செவ்வாய் 20, ஜனவரி 2026 4:51:47 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில்  தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/biketheftarrest_1768909619.jpgகன்னியாகுமரி மாவட்டத்தில்  அருமனை, குலசேகரம், கடையாலுமூடு, பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மார்த்தாண்டம் உட்கோட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் நல்ல சிவம் மேற்பார்வையில் ஆய்வாளர் வீராசாமி மற்றும் உதவி ஆய்வாளர் சுஜின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் தொடர் திருட்டில் ஈடுபட்டது திற்பரப்பு பகுதியை சேர்ந்த அச்சுதன் மகன் ஜெகன் (40) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவரிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள்  மற்றும் ரப்பர் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் மீது 61 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில்  அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory