» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அகஸ்தீஸ்வரம் அருகே மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு தொழிற்கூடம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
திங்கள் 19, ஜனவரி 2026 5:04:51 PM (IST)
ரயில் இஞ்சின்கள் (பொதுவாக "ரயில் இன்ஜின்கள்" என்று அழைக்கப்படுகின்றன) ரயில்வே நெட்வொர்க் மையமும் சாரமாகும். ரயில் இஞ்சின் (லோகோமோட்டிவ்) என்பது ரயிலுக்கு இயக்க ஆற்றலை அளிக்கும் வாகனமாகும். மின்சாரத்தால் இயக்கப்படும் ரயில்கள் மின்சார ரயில்கள் என அழைக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் ரயில்வேயில் மின்மயமாக்கல் தீவிரமடைந்து, இந்தியாவில் கிட்டத்தட்ட 95%க்கும் மேற்பட்ட தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு ரயில்வே பாதைகளை இணைக்கும் பூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே மையமாக அமைந்துள்ளது. மேற்கு பாதை திருவனந்தபுரம், எர்ணாகுளம், மங்களூர் வழியாக மேற்கு கடற்கரையோரம் செல்கிறது. கிழக்கு பாதை திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, சென்னை வழியாக இணைக்கிறது.
தமிழ்நாட்டில் தாம்பரம் – விழுப்புரம் – திருச்சிராப்பள்ளி – திண்டுக்கல் – மதுரை – திருநெல்வேலி – நாகர்கோவில் – கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதை இரட்டிப்பு திட்டப் பணிகள் முழுமை அடைந்து, ரயில்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. மேலும், இப்பகுதியில் முனைய வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் சந்திப்பில் பிட் லைன் பணிகள் முடிந்துள்ளன; கன்னியாகுமரியில் பிளாட்பார்ம் பணிகள் நிறைவடைந்துள்ளன; நாகர்கோவிலில் மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் தாம்பரம் – விழுப்புரம் – திருச்சிராப்பள்ளி – திண்டுக்கல் – மதுரை – திருநெல்வேலி – நாகர்கோவில் – கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதை இரட்டிப்பு திட்டப் பணிகள் முழுமை அடைந்து, ரயில்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. மேலும், இப்பகுதியில் முனைய வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் சந்திப்பில் பிட் லைன் பணிகள் முடிந்துள்ளன; கன்னியாகுமரியில் பிளாட்பார்ம் பணிகள் நிறைவடைந்துள்ளன; நாகர்கோவிலில் மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு தொழிற்கூடம்(மின்சார லோகோ ஷெட்) என்பது மின்சார ரயில் இஞ்சின்களைப் பராமரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் நிறுத்தி வைப்பதற்கான தொழிற்கூடமாகும். இதில் பராமரிப்பு, பழுது பார்த்தல், தினசரி பரிசோதனை, முழுமையான சீரமைப்பு (POH), கழுவுதல், வண்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெறும். சில ஷெட்களில் இன்ஜின் மாற்றும் வசதியும் உள்ளது.
மின்சார லோகோ ஷெட்டின் முக்கிய செயல்பாடுகள்:
மின்சார லோகோ ஷெட்டின் முக்கிய செயல்பாடுகள்:
மின்சார இன்ஜின்களின் அனைத்து வகையான சிறிய மற்றும் பெரிய பழுதுபார்க்கும் வேலைகள் இங்கு நடைபெறுகின்றன.
பராமரிப்புக்கு வரும் இன்ஜின்களை நிறுத்தி வைக்கும் இடம்.
இன்ஜின்களை அவ்வப்போது பரிசோதிக்கும் வசதி.
இன்ஜின்களை முழுமையாகப் பிரித்துச் சீரமைக்கும் பணிகள்.
இன்ஜின்களைச் சுத்தப்படுத்தி வண்ணம் பூசுதல்.
சில ஷெட்களில் AC மற்றும் AC/DC இன்ஜின்கள் மாற்றப்படும் வசதி உள்ளது
தற்போது தெற்கு ரயில்வேயில் லோகோ ஷெட்கள் ஈரோடு, எர்ணாகுளம், அரக்கோணம், ராயபுரம், திருச்சி, தண்டையார்பேட்டை, குன்னூர், பேசின் பிரிட்ஜ், எழும்பூர், ஜோலார்பேட்டை போன்ற இடங்களில் உள்ளன. இவை அனைத்தும் தமிழகத்தின் வட பகுதியில் அல்லது கேரளாவிலோ அமைந்துள்ளன. தென்தமிழகத்தில் இதுபோன்ற எந்த ரயில்வே தொழிற்கூடம் இல்லை.
அதிலும் குறிப்பாக மதுரை கோட்ட எல்லைக்குள் எந்த ஒரு ரயில்வே சம்பந்தமான தொழிற்சாலைகளும் இல்லை. இது முழுவதும் தென் தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக உள்ளது. தென் தமிழ்நாடு இன்னும் MEMU ஷெட்கள், மின்சார லோகோ ஷெட் கள் அல்லது உற்பத்தி வசதிகள் போன்ற அத்தியாவசிய ரயில்வே உள்கட்டமைப்புகளைப் பெறவில்லை. இப்பகுதி அதன் திறனுக்கு ஏற்ப ரயில்வே வளர்ச்சியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம் - கன்னியாகுமரி பாதை மின்மயமாக்கல் பணியின் போது அந்த திட்டத்துடன் ,இணைந்த டிராக்ஷன் பவர் கண்ட்ரோலர் அலுவலகம் குழித்துறையில் அமைக்க திட்டமிட்டு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. தற்போது அந்த கட்டிடங்களை குழித்துறை ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் அருகே காணலாம். ஆனால் தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த அலுவலகத்தை இங்கிருந்து மாற்றம் செய்து கேரளாவுக்கு கொண்டு சென்று விட்டார்கள்.
2000 ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில் முன்னாள் பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் லோகோ ஷெட் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாகர்கோவில்லோகோ ஷெட் கட்டுவதில் ஆர்வம் காட்டினார். ஆனால் ஏதோ காரணங்களால் இந்த திட்டம்
அப்போதுநிறை வேறாமல்போய்விட்டது
கன்னியாகுமரியில்அருகே (அகஸ்தீஸ்வரம் ரயில் நிலையம்)முன்னாள் பாரத பிரதமர்ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் மின்சார லோகோமோட்டிவ் ஷெட் அமைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. இதற்கான அறிவிப்பு 1-ம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சங்கத்தின் தலைவா ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் அதிகரித்த சரக்கு போக்குவரத்தையும் இது பூர்த்தி செய்யும். இதன்மூலம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சி மேலும் உயரும். கன்னியாகுமரியில் அருகேஅகஸ்தீஸ்வரம் ஏராளமான ரயில்வே நிலம் இருப்பதால்இத்திட்டம் சாத்தியமானதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 5:29:47 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 285 கோரிக்கை மனுக்கள்
திங்கள் 19, ஜனவரி 2026 4:39:45 PM (IST)

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)

