» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தின் ரயில்வே திட்டங்கள் : மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 11:33:22 AM (IST)

ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்த ராமேஸ்வரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரயில் பாதை திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு அளித்தார்.
புதிய ரயில்கள், ரயில் நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து பேசினார்.
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் மக்கள் கோரிக்கையை வலியுறுத்திய விஜய் வசந்த் அவர்கள் கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்தார். நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி வாரந்திர ரயில், கன்னியாகுமரி – ஹைதராபாத் தினசரி விரைவு ரயில் ஆகிய புதிய ரயில்களின் தேவையை முன் வைத்தார்
ரயிலகள் நீட்டிப்பு: புதியதாக அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், புனலூர் - மதுரை ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும், மங்களூர் – திருவனந்தபுரம் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், ஹவ்ரா – திருச்சி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்தல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்காக திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயில்களை நீட்டிக்க வேண்டும் எனவும், தாம்பரம் – நாகர்கோவில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
ரயில் நிறுத்தங்கள்: காந்திதாம் விரைவு ரயில் மற்றும் ஜாம்நகர் ரயில்கள் குழித்துறை ரயில் நிலையத்திலும், புனலூர்-மதுரை ரயில் பள்ளியாடி ரயில் நிலையத்திலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி (intercity) ரயில் இரணியல் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என கோரினார்.
உட்கட்டமைப்பு வசதிகள்: ரயில் இரட்டிப்பு பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக மந்தமான நிலையில் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி அதனை துரிதபடுத்த ஆவன செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார். கன்னியாகுமரியில் மின்சார லோகோ ஷெட்(electric loco shed) , நாகர்கோவில் டவுன் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு செல்ல இரண்டாவது நுழைவு வாயில், நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள், மோசமான நிலையில் காணப்படும் குழித்துறை ரயில் நிலையம் செல்லும் சாலையை செப்பனிடுதல், மழை காலங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள், பயணிகள் வசதி கருதி இரயில் நிலையங்களின் மேம்பாடு ஆகியவற்றை சுட்டி காட்டி கோரிக்கை வைத்தார்.
தொலைநோக்கு திட்டங்கள் : ராமேஸ்வரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரயில் பாதை ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். அது போன்று அறிவிக்கப்பட்டுள்ள அங்கமாலி-எருமேலி-விழிஞ்சம் ரயில் பாதையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா-குலசேகரம்-பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி சென்றடையும் விதமாக நீட்டிப்பதற்கு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது போன்று காலி சரக்கு ரயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரயில் பாதையை அமைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி தேர்தல் களம்: 5 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை? விஜய் வருகையால் சவாலா?
செவ்வாய் 17, மார்ச் 2026 11:03:39 AM (IST)

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)


ஓட்டு போட்ட முட்டாள்Dec 17, 2025 - 11:58:31 AM | Posted IP 162.1*****