» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு

செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)



கன்னியாகுமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். ஸ்டாலின், உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, கடல் பாறைகள் உள்ள அபாயகரமான பகுதிகளில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

கடல் அலைகள் மற்றும் பாறை பகுதிகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், பொதுமக்கள் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பொதுமக்களும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களது பாதுகாப்பை தாங்களே உறுதிசெய்துகொள்ள வேண்டும் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மாவட்ட காவல் துறையின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பெரும்பாலான பொதுமக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory