» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35பேர் உள்ளனர்: ஆட்சியர் அழகுமீனா தகவல்!

வெள்ளி 12, டிசம்பர் 2025 8:50:25 PM (IST)

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர் உள்ளதாக கலந்தாய்வு கூட்டத்தில் ஆட்சியர் அழகுமீனா தெரிவித்தார்.

குமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் அழகுமீனா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

குமரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளனர். அதில் கன்னியாகுமரி தொகுதியில் 2,74,049 கணக்கீட்டு படிவங்களும், நாகர்கோவில் தொகுதியில் 2,43,337 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் குளச்சல் தொகுதியில் 2,51,262-ம், பத்மநாபபுரம் தொகுதியில் 2,24,145-ம், விளவங்கோடு தொகுதியில் 2,14,196-ம், கிள்ளியூர் தொகுதியில் 2,32,219 என மொத்தம் 14,39,208 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டு மின்னணுமயமாக்கப்பட்டு உள்ளது. இதில் 5,72,471 வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் சுயமாக வரைபடமாக்கப்பட்டு உள்ளது.

இதுபோக 6 தொகுதிகளிலும் மொத்தம் 8,58,079 வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் சந்ததியினராக வரைபடமாக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 8,658 கணக்கீட்டு படிவங்களில் 8,534 கணக்கீட்டு படிவங்கள் வரைபடமில்லாததாகும். 124 கணக்கீட்டு படிவங்கள் பூத் லீடர் அதிகாரியால் சரிபார்க்கப்பட இயலவில்லை. 6 தொகுதிகளிலும் மொத்தம் 57 ஆயிரத்து 2 வாக்காளர்கள் இறந்துள்ளார்கள்.

இதில் அதிகளவு குளச்சல் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் ஆகும். மேலும் 8,566 வாக்காளர்களின் தகவல் கிடைக்க பெறவில்லை. இதேபோன்று 75,994 வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளார்கள் என அறியப்பட்டுள்ளது. 11,851 வாக்காளர்கள் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 1,53,669 கணக்கீட்டு படிவங்கள் மின்னணுமயமாக்கப்படவில்லை.

குமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 16 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 35 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் ஆவர். 6,543 ஆண்கள், 7,545 பெண்கள் என மொத்தம் 14,198 வாக்காளர்கள் 85 வயது முதல் 99 வயதிற்குட்பட்டவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேர்தல் தனி தாசில்தார் வினோத், உசூர் மேலாளர் (பொது) சுப்பிரமணியன், பெல் நிறுவன பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்த கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory