» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!

வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)

நாகர்கோவில் அருகே குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர் மற்றும் உடந்தையாக இருந்த நடத்துநர் ஆகியோருக்கு போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்தனர்.

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் நேற்று (டிச. 10) செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், மினி பஸ் ஓட்டுநரான கொடுப்பைக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெபர்சன் (48) என்பவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த மினி பஸ்ஸை பறிமுதல் செய்தனர். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் ஜெபர்சனுக்கு ரூ. 17,000-ம், இதற்குப் பொறுப்பான நடத்துநருக்கு ரூ. 10,500-ம் என மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory