» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவர் கைது!

புதன் 19, நவம்பர் 2025 8:36:38 AM (IST)

இரணியல் அருகே பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் இரணியல் அருகே ஒரு கிராமத்தில் திருமணமான 37 வயது பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மொட்டவிளையைச் சேர்ந்தவர் பச்சைமால் மகன் தர்மலிங்கம் (வயது50). இவர் அந்த பெண்ணின் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து ஆபாச செய்கை கட்டியுள்ளார். 

இதுகுறித்து அந்த பெண் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தர்மலிங்கத்தை அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்பினர். இந்தநிலையில் சம்பவத்தன்றும் தர்மலிங்கம் அந்த பெண்ணின் வீட்டை ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். இதை கண்ட அந்த பெண் சத்தம் போட்டு தட்டிக் கேட்டுள்ளார்.

அதற்கு தர்மலிங்கம் தகாத வார்த்தைகளால் பேசி கையில் வைத்திருந்த சுத்தியலால் அடித்து விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் விசாரணை நடத்தி தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். பின்னர், அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory