» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!

வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் வந்த 6 கனரக வாகனங்களுக்கு போலீசார் ரூ.2.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் ஏற்றி வந்த 6  கனரக வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 2,10,000 ரூபாய் அபராதம் விதித்து கன்னியாகுமரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory