» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!

வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பராத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு வருகையின் குமரி மாவட்ட ரயில் பயணிகளின் ஒரு கோரிக்கையாவது தொடங்கி வைப்பார் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பாரத பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி  ஜூலை மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.  வருகின்ற 2026 -ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் பாரத பிரதமர் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாடு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராஜேந்திர சோழனின் அவதார தினம், இந்துக்களின் புனிதமான நாளான ஆடி திருவாதிரை அன்று கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகிறார் மோடி  கங்கை கரை காசியின் பிரதிநிதியாக கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருவது வரலாற்று சிறப்புமிக்க விஷயம், தமிழர்களின் மாபெரும் அடையாளமான சோழ வம்சத்தின் தனி அடையாளமாக அவர்கள் கொண்ட சிவபக்தியில் தனிப்பெரும் ஆலயம் அமைந்த அந்த மண்ணுக்கு பாரத பிரதமர் வருவதை ஒவ்வொரு தமிழரும் பெருமையுடன் எதிர் பார்த்திருக்கின்றார்கள். பாரத பிரதமர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் போது சோழபுரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நேரடியாக ரயில்கள் இயக்க வேண்டும் என்ற பல முக்கிய ரயில்வே கோரிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளன.

மதுரை – புனலூர் ரயில் திருநள்ளாறு வரை நீட்டிப்பு :

ரயில்வேதுறை காரைக்கால் - திருநள்ளாறு - பேரளம் பாதை பணிகள் முடித்து மிக சமீபத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள். இந்த நிலையில் தற்போது புனலூரிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக மதுரைக்கு இயக்கி கொண்டிருக்கும் தினசரி ரயிலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் வழியாக திருநள்ளாறு வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். திருநள்ளாறு ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள போதிய வசதி இல்லாத பட்சத்தில் திருநள்ளாறு, பேரளம் வழியாக இயக்கி  மைலாடுதுறை அல்லது கடலூர் வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம் என்ற ஆலோசனையும் ரயில்வே துறையிடம் வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி – புதுச்சேரி தினசரி ரயில்:

இந்தியாவினுடைய வரைபடத்தில், கன்னியாகுமரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள், எப்பொழுதும், முன்னுரிமை தந்து வருவார்கள். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரியில் வந்து தியானம் செய்தார்கள். கன்னியாகுமரியிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வழியாக அதாவது திருச்சி, தஞ்சாவூர் , கும்பகோணம், மைலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக புதுச்சேரி வரை செல்லும் வாராந்திர ரயிலை கால அட்டவணை மாற்றம் செய்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே நிலுவையில் உள்ளது புதுச்சேரி பிஜேபி மற்றும் புதுச்சேரி முதல்வர் அவர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் - கோட்டயம்  தினசரி ரயிலை விருதுநகர், பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் வரை நீட்டிக்க கோரிக்கை: நாகர்கோவிலிருந்து கேரளாவில் உள்ள கோட்டயம் நகரத்துக்கு திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம் வழியாக தினசரி பகல் நேர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரிலிருந்து ஒரு வழித்தடம் பிரிந்து கிழக்கு கடற்கரை நகரங்கள் வழியாக அதாவது அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வழியாக திருவாரூர் போய் சேருகின்றது. 

இந்த தடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.  கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டத்திலிருந்து இந்த வழித்தடங்களில் செல்ல எந்த ஒரு தினசரி ரயில் சேவையும் தற்போது இல்லை.  ஆகவே நாகர்கோவில் - கோட்டயம் பகல்நேர ரயிலை திருநெல்வேலி, விருதுநகர், அருப்புக்கோட்டை,  மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வழியாக திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

இந்த கோரிக்கைகளில் பராத பிரதமர் நரேந்திர மோடி  தமிழ்நாட்டு வருகையின் போது ஏதேனும் ஒரு கோரிக்கையானது தொடங்கி வைப்பார் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


மக்கள் கருத்து

M BabuJul 17, 2025 - 05:39:20 PM | Posted IP 162.1*****

kanyakumari to puduchery vandiya saturadya night inga irunthu start panni sunday pondy to kanyakumari vantha kandipa wkkened kootam yerum sunday and monday otuna yaru povanga pa yosikama than vandiya otuvangala

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory