» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு

வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)

குழித்துறை பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் 7பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

குமரிமாவட்டம் குழித்துறையில் நடந்து வரும் வாவுபலி பொருட்காட்சியில், 'ரீல்ஸ்' மோகத்தில் சில இளைஞர்கள் கூட்டத்தின் இடையே முகம் சுளிக்க வைக்கும்படி குத்தாட்டம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குழித்துறை நகராட்சி சார்பில் வாவுபலி பொருட்காட்சி நடந்து வருகிறது. இந்த பொருட்காட்சியை காண தினமும் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக வந்து செல்கிறார்கள்.

அந்த சமயத்தில் திடீரென இளைஞர்கள் சிலர் கூட்டத்தினரிடையே நைட்டி அணிந்தபடி புகுந்து பொதுமக்களுக்கு இடையூறையும் ஏற்படுத்தினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பெண்கள் அச்சம் அடைந்தனர். ஆனாலும் இளைஞர்களின் ஆட்டம் நின்றபாடில்லை. நைட்டியை தூக்கியபடி மாடல் அழகி நிகழ்ச்சி போன்றும் செய்து காட்டினர். இது பெண்களை முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. 

இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பொதுஇடத்தில் இதுபோன்று அநாகரீகமாக செயல்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளத்தில் பலரும் கருத்துகளை பதிவிட்டனர். இதுதொடர்பாக பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த மார்சல் (25), சஜூ (24) உள்பட 7 பேர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory