» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
திங்கள் 7, ஜூலை 2025 4:06:45 PM (IST)

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, மதுரையில் பா.ஜ.க.வினரின் நடத்தியது சங்கிகள் மாநாடு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் கடந்த 2.7.2009 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்க் கடவுளான முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையே நடத்தியுள்ளோம். திருச்செந்தூரில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டு, முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடந்துள்ளது. குடமுழுக்கு விழாவில் 24 மணி நேரமும் 12 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 108 ஓதுவார்கள் தமிழில் பாராயணம் செய்தனர்.
இவ்விழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை தொடர்ந்து 30 நாள்கள் மட்டுமே மண்டல பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு ஆவணி திருவிழா தொடங்க உள்ளது. ஹெச்சிஎல் நிறுவனம் ரூ. 200 கோடி செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பணிகளை செய்ய கடந்த ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உபயதாரர்களை ஊக்குவிக்கும் விதமாக அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், பக்தர்களுக்கு கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக அரசு சார்பிலும், திருக்கோயில் சார்பிலும் கூடுதலாக ரூ.200 கோடி என மொத்தம் ரூ. 400 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் மீதமுள்ள பணிகள் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவடையும். திருச்செந்தூரில் பெருந்திட்ட வளாகத்தில், பணியில் அறுபடை முருகனை ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இக்கோயிலில் ஆன்லைன் முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்காக பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட திருக்கோயிலாக திருச்செந்தூர் கோயில் விரைவில் மாறும். இந்து சமய அறநிலையத் துறையை தமிழக அரசிடம் இருந்து எடுத்துவிட்டால் யார் நிர்வகிப்பார்கள்? தமிழகத்தில் 46 ஆயிரம் கோயிலை நிர்வகிப்பது எப்படி? இயலாதவர்கள்தான் மீண்டும் மீண்டும் இதைப் பேசி வருகிறார்கள்.
மதுரையில் நடந்தது சங்கிகள் மாநாடு. தமிழ்க் கடவுளான முருகனுக்கு மாநாட்டை நடத்திய பெருமை இந்த அரசுக்கு உண்டு என்றார். பேட்டியின் போது அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் பழனி, தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

சாமான்யன்Jul 7, 2025 - 09:45:03 PM | Posted IP 104.2*****