» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு நாய்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிப்பு

வெள்ளி 4, ஜூலை 2025 9:02:46 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு நாய்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியில 4 மண்டலம் 60 வார்டுகள் உள்ளது. மாநகர தெருக்களில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். 

இது குறித்து மாநகர சுகாதாரத் துறையினர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தெரு நாய் தொல்லைகளில் இருந்து பொது மக்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லாத எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

Sivaselva RajJul 5, 2025 - 08:46:09 PM | Posted IP 162.1*****

We are residing in TNHB colony Ettayapuram Road . Almost there was 8 dogs disturbing the pedestrian and cylist. Especially during night hours, disturbing sleep and peace.This is creating an unsafe conditions for the residents.kindly take immediate action.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory