» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆட்சியர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை: புதுக்கடை அருகே சோகம்!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:54:03 AM (IST)
புதுக்கடை அருகே கடன் தொல்லையால் ஆட்சியர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்தவர் ரசல் ராஜ் (55). இவர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். ரசல் ராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடன் தொல்லையும் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ரசல் ராஜ் நேற்று முன் தினம் வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநங்கைகள் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:57:09 PM (IST)

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)
