» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: 2பேர் கைது!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:51:21 AM (IST)
சுசீந்திரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் மேல தெருவை சேர்ந்த பெயிண்டர் அய்யப்பன் (33). இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று இருவரும் பைக்கில் சுசீந்திரம் அருகே கற்காடு ரயில்வே கிராசிங் அருகே சென்ற கொண்டிருந்தனர். அப்போது சுசீந்திரம் கற்காடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (26), கோட்டார் சபையார்குளத்தை சேர்ந்த அர்ஜுன் (23) ஆகிய இருவரும் சேர்ந்து அய்யப்பனை வழிமறித்தனர்.
பின்னர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1000-த்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அய்யப்பன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரசாந்த், அர்ஜுன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

