» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாற்றுத் திறனாளிகளுக்கான சுற்று நீதிமன்றம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்!

சனி 12, ஏப்ரல் 2025 12:06:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுற்று நீதிமன்றம் நடைபெறவுள்ளது என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் இவ்வாணையத்தை எளிதில் அணுகும்படியாக சுற்று நீதிமன்றம் (Circuit Court) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் முதற்கட்டமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10:30 மணி முதல் மதியம் 3:00 மணி வரை 29.05.2025 மற்றும் 30.05.2025 ஆகிய இரண்டு நாட்கள் சுற்று நீதிமன்றம் நடைபெறும் என இச்செய்தி வெளியீடு வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விரண்டு நாட்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரால் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து முன்கூட்டியே பெறப்படும் மனுக்கள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 80(டி) ன் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையருக்கு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்படின் அவற்றை தகுந்த அதிகார அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்ல இவ்வாணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கீழ்காணும் பிரச்சனைகள் குறித்து தங்களுக்கு புகார் இருப்பின் மாநில ஆணையத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ புகாரை 30.04.2025 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். அவ்வாறு பெறப்படும் புகார் மனுக்களின் மீது அரசு துறைகளின் பதிலை பெற்று இறுதி பரிந்துரை வழங்க வழிவகை உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின் கீழ் விசாரிக்க தகுந்த புகார்கள்

1. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு சேவைகளில் சம வாய்ப்பு மறுத்தல்.

2. மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் மோசடி, வன்முறை மற்றும சுரண்டல் போன்ற இன்னல்களில் பாதிக்கப்படுவது குறித்த புகார் மனுக்கள்.

3. நீதிமன்றத்தை அனுகுவதில் பொருளாதார பிரச்சனை காரணமாக வழக்கறிஞர் உதவியை நாட இயலாதது குறித்த மனுக்கள்.

4. பாதுகாவலர் சான்று பெறுவதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தாமதம் குறித்த புகார் மனுக்கள்.

5. கல்வி நிலையங்களில் சேர்க்கையின் போதும் சேர்ந்த பின்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த புகார்கள்.

6. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை பெறுவதில் தாமதம் குறித்த புகார் மனுக்கள்.

7. உயர்கல்வியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் இருப்பது குறித்த மனுக்கள்.

8. மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமையை வழங்க மறுத்தல் (சொத்துரிமையை உரிய நீதிமன்றத்தின் மூலம் மீட்க தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும்)

9. மாற்றுத்தினாளி மாணவர்களுக்கு மொழிப்பாட விலக்கு மற்றும் இன்னபிற சலுகைகள் மறுக்கப்படுதல் குறித்த புகார் மனுக்கள்.

10. மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு இலகுப்பணி/மாற்றுப்பணி வழங்க வேண்டிய சு+ழல் இருந்தும் இலகுப்பணி/ மாற்றுப்பணி வழங்க வேண்டிய சு+ழல் இருந்தும் இலகுப்பணி /மாற்றுப்பணி வழங்க மறுத்தல்.

11. மாற்றுத்திறனாளி பணியாளர் என்ற அடிப்படையில் பதவி உயர்வு மறுத்தல்.

12. பணியில் சேர்ந்த பின்பு மாற்றுத்திறனாளியான பணியாளர்களுக்கு தொடர்பணி வழங்க மறுத்தல் மற்றும் பதவியிறக்கம் செய்தல் குறித்த புகார் மனுக்கள்.

13. மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தங்களது சொந்த மாவட்டத்தில் பணியாற்ற கோரி காலியிடம் இருந்தும் வழங்க மறுத்தல்.

14. நிறுவனங்கள் சம வாய்ப்பு கொள்கை வெளியிடாமல் இருப்பது குறித்த புகார் மனுக்கள்

15. அரசுத் துறைகள் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் அலுவலர் நியமிக்காமல் இருப்பது குறித்த புகார் மனுக்கள்.

16. மாதாந்திர உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து கிடைக்காமல் இருப்பது, பெற்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது குறித்து புகார் மனுக்கள்.

17. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது குறித்த புகார் மனுக்கள்.

18. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுத்தல்.

19. பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்கள் மற்றும் இணையதளங்களில் அணுகல் தன்மை இன்மை குறித்த புகார் மனுக்கள்.

20. மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள் 2016 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் செயல்படுவது குறித்த புகார் மனுக்கள்.

21. அரசு சாரா நிறுவனங்களால் நடத்தப்படும் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களில் குழந்தைகளை முறையாக கவனிக்காமல் துன்புறுத்துதல் குறித்த புகார் மனுக்கள்.

22. பயிற்சி பெற்ற பதிவு செய்த மறுவாழ்வு நிபுணர்கள் இல்லாமல் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் நடத்துதல்.

23. மாற்றுத்திறனாளியாக இல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை சட்டத்திற்கு புறம்பாக பெறுவது குறித்த புகார் மனுக்கள்.

24. குற்ற நிகழ்வுகள் குறித்து காவல் துறைக்கு புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்கள் குறித்த புகார்கள் (சிவில் பிரச்சனைகளுக்கு காவல் துறையை அணுகி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போன்ற புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது).

மனுக்கள் கடிதமாகவோ பிரமாணப்பத்திரமாகவோ மனுதாரரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், மனு குறித்த விரிவான விவரம், மனுவில் கோரப்படும் நிவாரணம் குறித்த தகவல், மனுதாரரின் கைரேகை அல்லது கையொப்பம், .மனுவிற்கு சம்பந்தமான உரிய ஆவணங்கள் மற்றும் எதிர்மனுதாரர் குறித்த தகவல்கள் (அலுவலர் பெயர் மற்றும் முகவரி அஞ்சல் குறியீட்டுடன்) ஆகிய தகவல்களுடன் அமையப்பெற வேண்டும்.

மேற்படி விவரங்கள் அடங்கிய மனுவினை மாற்றுத்திறனாளியோ அல்லது அவரது உறவினரோ அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கமோ அல்லது மாற்றுத்திறனாளிகளின் நலன் விரும்பிகளோ மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், எண்:5, காமராஜர் சாலை, லேடி வெலிங்டன் மகளிர் கல்லூரி வளாகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ [email protected] என்ற இணைய முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 30.04.2025 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மனுக்கள் தாக்கல் செய்வது குறித்த தகவல்களுக்கு 9499933236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: ஏற்கனவே, தகுதி வாய்ந்த நீதின்றத்தில் முடிவு செய்ய்பட்ட வழக்குகள் அல்லது ஏறகனவே தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து குறித்த புகார்கள், குடும்ப தகராறு குறித்த வழக்குகள், மாற்றுத்திறனுக்கும் தனியரது பிரச்சனைக்கும் தொடர்பில்லாத மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016ன் கீழ் பொருந்தாத வழக்குகள் குறித்து இவ்வாணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

தலைமை: சுதன், 
மாற்றுத்திறனாளிக்களுகான மாநில ஆணையர்,
மனுக்கள் பெறப்படும் கடைசி தேதி : 30-04-2025.
விசாரணை நேரம்: காலை 10.30 முதல் 3.00 மதியம் மணி வரை, 
விசாரணை தேதி: மே 29 & 30, 2025.
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory