» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு : சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவு
சனி 12, ஏப்ரல் 2025 8:45:17 AM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர், தூத்துக்குடி 4-ம் கேட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது கார் மோதி படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் நஷ்டஈடு கோரி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு சிறப்பு மக்கள் கோர்ட்டில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பிறகு, துரைசிங்குக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 6 ஆயிரத்து 486 நஷ்ட ஈடு தொகை வழங்க முதன்மை நீதிபதி வசந்தி உத்தரவிட்டார். இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா மற்றும் வக்கீல்கள் ரெங்கநாதன், குருசாமி, பால்ஆசீர் ஆகியோர் ஆகினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:05:39 PM (IST)

பைக் விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு: குளச்சல் அருகே சோகம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:58:56 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை: அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:03:48 PM (IST)

தேசிய சுகாதார திட்டத்தில் 18 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:42:34 AM (IST)

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சி: தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் பலி!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:35:02 AM (IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)

grrjaApr 12, 2025 - 10:56:34 AM | Posted IP 162.1*****